மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
Thursday, 9 January 2020
தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம்
சென்னை: தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
3வது சென்னை புத்தகக்காட்சி தொடக்கம் புத்தகக் காட்சி நடத்த அரசு 75 லட்சம் வழங்கும் : முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
சென்னை: அடுத்த ஆண்டில் இருந்து புத்தகக் காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று 43வது சென்னை புத்தகக்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி கூறினார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தனி அதிகாரி பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
பெட்ரோல் 15 காசு, டீசல் 12 காசு விலை அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,10) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.92 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.97 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் விமான விபத்து: ஈரான் மீது அமெரிக்கா சந்தேகம்
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியாகி இருக்கலாம் என அமெரிக்கா, கனடா சந்தேகம் எழுப்புகிறது.
பசு நல வாரியத்திற்காக நிதி அதிகரிப்பு உ.பி., முதல்வர்
லக்னோ: மாநிலத்தில் பசு நல வாரியத்திற்காக செஸ் வரியை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என வேளாண்துறையை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.
நிதியமைச்சர் எங்கே? : காங்., கேள்வி
புதுடில்லி ; பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது குறித்து காங்., சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறது.
புகையில்லா பொங்கல் : பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை : பொங்கல் திருநாளை புகையில்லா பொங்கலை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிகல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
காருக்கு ரூ.27.68 லட்சம் அபராதம்: இந்தியாவிலேயே அதிகபட்ச தொகை
ஆமதாபாத்: உரிய ஆவணம் இல்லாததால் காவல்துறையினர் பறிமுதல் செய்த காருக்கு ரூ.27.68 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச அபராதம் இது தான்.
குமரி அனந்தன் கோரிக்கை
சென்னை: 'உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் எல்லைக்குள் மதுவுக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
பொங்கல் பரிசு வழங்க ரூ 2360 கோடி ஒதுக்கீடு
சென்னை: பல்வேறு திட்டப் பணிகளுக்கு 6580.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நேற்று இரண்டாவது துணை மதிப்பீடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநகராட்சியில் தரை வழி கேபிள்: அமைச்சர் உறுதி
சென்னை: ''மாநகராட்சி பகுதிகளில் படிப்படியாக தரைவழி கேபிள் வாயிலாக மின்சாரம் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்'' என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க. - மெய்யநாதன்: ஆலங்குடி தொகுதி கத்தக்குறிச்சி ஊராட்சி கண்ணாயப்பட்டியில் புதிய மின்மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் தங்கமணி: ஏற்கனவே இரண்டு மின்மாற்றிகள் உள்ளன. புதிதாக ஒரு மின்மாற்றி அமைக்கப்படும். மெய்யநாதன்: என் தொகுதியில் 20 ஊராட்சிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும். இதற்காக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மின் வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அமைச்சர் தங்கமணி: டெல்டா மாவட்டங்களில் மின்னழுத்த குறைபாடு பிரச்னை உள்ளது. நீண்ட துாரம் செல்லும் மின் கம்பிகள் தான் இதற்கு காரணம். இடமிருந்தால் ஆய்வு செய்து துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
தி.மு.க. - கார்த்திகேயன்: வேலுார் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: மாநகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை படிப்படியாக தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறையுடன் கலந்து பேசி வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தரை வழி கேபிள்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க. - மெய்யநாதன்: ஆலங்குடி தொகுதி கத்தக்குறிச்சி ஊராட்சி கண்ணாயப்பட்டியில் புதிய மின்மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் தங்கமணி: ஏற்கனவே இரண்டு மின்மாற்றிகள் உள்ளன. புதிதாக ஒரு மின்மாற்றி அமைக்கப்படும். மெய்யநாதன்: என் தொகுதியில் 20 ஊராட்சிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும். இதற்காக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மின் வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அமைச்சர் தங்கமணி: டெல்டா மாவட்டங்களில் மின்னழுத்த குறைபாடு பிரச்னை உள்ளது. நீண்ட துாரம் செல்லும் மின் கம்பிகள் தான் இதற்கு காரணம். இடமிருந்தால் ஆய்வு செய்து துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
தி.மு.க. - கார்த்திகேயன்: வேலுார் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: மாநகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை படிப்படியாக தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறையுடன் கலந்து பேசி வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தரை வழி கேபிள்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் தொகுதி நிதி விருப்பப்படி செலவிட அனுமதி?
சென்னை: ''தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏ.க்கள் விருப்பப்படி செலவிட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்'' என முதல்வர் பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்
விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வன், நேற்று தி.மு.க., வில் இணைந்தார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க., 14, தி.மு.க., 10, சுயேட்சை 1 என 25 கவுன்சிலர்கள் உள்ளனர்.
காங்., பிழைகளை சரி செய்கிறார் மோடி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு
மதுரை: ''குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. காங்., ஆட்சியில் நடந்த வரலாற்று பிழைகளை பிரதமர் மோடி சரிசெய்து வருகிறார்,'' என, மத்தியபெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்
ஓ.பி.எஸ்., மற்றும் ஸ்டாலினுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டோ பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது
சென்னை: துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்ட, மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டோ பாதுகாப்பு, இன்று முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெண்ணை காப்பாற்ற உயிர் துறந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்
சென்னை: ''பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த, இளைஞர் குடும்பத்திற்கு, ௧௦ லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.
குடியுரிமை சட்ட விவகாரம்: ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை, விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று வெளிநடப்பு செய்தனர்.
வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி
சென்னை: ''கன்னியாகுமரி மாவட்டத்தில், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, சிறப்பு எஸ்.ஐ., வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
3.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை
சென்னை: ''ஐந்து லட்சம் பேருக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 1.56 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு, பதில் அளித்து, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
கூவம் நதிக்கரையில் வசிப்போர் மறுகுடியமர்வு: துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்
சென்னை: ''கூவம் நதிக்கரையில் வசிப்போரை, மறு குடியமர்வு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதி: முதல்வர் உறுதி
சென்னை: ''தொகுதி மேம்பாட்டு நிதியை, எம்.எல்.ஏ.,க்கள் விருப்பப்படி செலவிட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
செங்கல்பட்டு மருத்துவமனையில் தலைக்காயம் சிகிச்சை பிரிவு
சென்னை: ''செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தலைக்காயம் சிகிச்சை பிரிவு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மாநகராட்சியில் தரைவழி கேபிள்: அமைச்சர் தங்கமணி உறுதி
சென்னை: ''மாநகராட்சி பகுதிகளில், படிப்படியாக, தரைவழி கேபிள் வாயிலாக மின்சாரம் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
உணவு உற்பத்தியில் புதிய மைல் கல்: முதல்வர் இ.பி.எஸ்., நம்பிக்கை
சென்னை: ''தமிழகம், உணவு உற்பத்தியில், ஒரு புதிய மைல் கல்லை எட்டும். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக, வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரத்தை உயர்த்த கடும் முயற்சி தேவை: பிரதமர் மோடி
புதுடில்லி: பொருளாதார வல்லுனர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்த, முயற்சி எடுக்க வேண்டும்,” என, கேட்டுக்கொண்டார்.
பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் பிளவு! சோனியா கூட்டத்தை புறக்கணிக்கிறார் மம்தா
கோல்கட்டா: மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வன்முறை குறித்தும் விவாதிக்க, வரும், 13ம் தேதி, எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
டில்லியில் முதல்வர் வேட்பாளர் யார்? அறிவிப்பதில் பா.ஜ.,வுக்கு குழப்பம்
பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் வருவதால், டில்லி சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், பா.ஜ., தலைமை உள்ளது.
பலாத்கார வழக்குகளில் தண்டனை விதிப்பு 27.7% தான்
புதுடில்லி: நிர்பயா வழக்கில், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு, பாலியல் பலாத்கார வழக்குகளில், 27.7 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாக்.,கின் பொய் பிரசாரம் பலிக்காது: காஷ்மீரில் ஆய்வு செய்த வெளிநாட்டு தூதர்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370 ஆவது சட்டபிரிவின் படி அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நேரில் ஆய்வு செய்ய வெளிநாட்டு தூதர்கள் 16 பேர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் அங்கு வருகை தந்தனர்.
Wednesday, 8 January 2020
21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதியில்லை
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும்
துணை மின் நிலையம் அமைக்க இடம் கேட்கிறார் அமைச்சர்
சென்னை: 'துணை மின் நிலையங்கள் அமைக்க, தனியார் இடம் கொடுத்தால், மின் வாரியம் தயாராக உள்ளது,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
'யோகா செய்தால் கோபம் மறையும்': அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: ''யோகாசனம் செய்தால், கோபம் மறையும். சென்னை பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு, யோகா கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாநில அரசுக்கு உரிமை உள்ளது: மத்திய அரசு விளக்கம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தமிழகம் உள்ளிட்ட அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள உரிமை உள்ளது' என, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
பொது துறை பங்கு விற்பனை அமைச்சரவை குழு ஒப்புதல்
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, ஆறு நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
காங்., செயற்குழு கூட்டம் டில்லியில் நாளை கூடுகிறது
புதுடில்லி: டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறை சம்பவம், அதை தொடர்ந்து நடைபெறும் மாணவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், செயற்குழு கூட்டம், நாளை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பட்ஜெட்டுக்கு ஆலோசனை வழங்க மோடி அழைப்பு!
புதுடில்லி : 'வரும், 2020 - 2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 'மைகவ்' இணையதளத்திலும், 'டுவிட்டர்' சமூக வலைதளத்திலும் மக்கள் ஆலோசனைகளை வழங்கலாம்' என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரான் தாக்குதலில் பாதிப்பு கிடையாது: டிரம்ப் உறுதி
வாஷிங்டன் : ஈரான் தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்த பாதிப்பு இல்லை எனவும், வீரர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். மேலும் ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் செனட்டில் எப்போது விவாதம்?
வாஷிங்டன்,:அமெரிக்க அதிபர் பதவிக்கு, இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் தீவிரமாக உள்ளார்.
இரு கட்டங்களாக நடக்கிறது பார்லி .பட்ஜெட் கூட்டத்தொடர்?
புதுடில்லி: பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்திட பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு எதிராக போர் :டிரம்ப் ராணுவ அதிகாரத்தை குறைக்க முடிவு
வாஷிங்டன்: ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. 'இதற்கு பழிக்கு பழி வாங்க நேற்று ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று அதிபர் டிரம்ப், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதித்தார்.
உலகின் மிக உயரமான ரயில் பாலம் டிச.2021ல் முடிக்க இலக்கு
புதுடில்லி : காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.1110 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த பாலம் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விடவும் உயரமானது ( ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர்களாகும்.) 1.3 கி.மீ., நீளம் கொண்ட இந்த பாலத்தின்உயரம் 359 மீட்டர் ஆகும்.
பெட்ரோல் 8 காசு, டீசல் 16 காசு அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,09) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.77 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.7285காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
16 நாட்டு தூதர்கள் இன்று காஷ்மீர் வருகை
புதுடில்லி; 16-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாட்டு தூதர்கள் கொண்ட குழுவினர் இன்று ஜம்மு-காஷ்மீர் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி.,அந்தஸ்து:பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு
புதுடில்லி: கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலித் மக்களுக்கு எஸ்.சி. எனப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாக்தாத்தின் அதிபாதுகாப்பு பகுதியில் ராக்கெட் தாக்குதல்
பாக்தாத் : தெஹ்ரானில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய 24 மணி நேரத்தில், ஈரான் தலைநகர் பாக்தாத்தில் க்ரீன் ஜோன் (Green zone)எனப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இரண்டு முறை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு
புதுடில்லி: அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை 3.5 சதவீதம், அதாவது ஒரு பீப்பாய் 71 டாலராக உயர்ந்துள்ளது.
பொருளாதாரத்தை அழிக்கும் முயற்சியே ஸ்டிரைக் : மம்தா விளாசல்
கோல்கட்டா : அரசியல் இருப்பு இல்லாதவர்கள் ஸ்டிரைக் நடத்தி மாநிலத்தின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
பெல் உள்ளிட்ட 5 நிறுவன பங்குகளை விற்க ஒப்புதல்
புதுடில்லி: பெல் நிறுவனம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
100 வழித்தடங்களில் தனியார் ரயில்கள்; நிறுவனங்களுக்கு அழைப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு 'நிடி ஆயோக்' அழைப்பு விடுத்துள்ளது.
ஈரான் தாக்குதலில் பாதிப்பு கிடையாது: டிரம்ப் உறுதி
வாஷிங்டன் : ஈரான் தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்த பாதிப்பு இல்லை எனவும், வீரர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். மேலும் ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tuesday, 7 January 2020
சி.ஏ.ஏ. எதிர்ப்பு கோலம் போட்டவர்கள் கைது... சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்
சென்னை: அடுத்தவர்கள் வீட்டில் கோலம் போடுவதாக புகார் வந்ததால் தான் சென்னையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தஞ்சை தமிழ் பல்கலை. துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை
மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே ஊராட்சி தலைவர் பதவியேற்பில் மோதல்... வீடு, வாகனங்கள் அடித்து உடைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்ப்பு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக வெடித்தது. மூங்கிலேறி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றி உஷா ராணி நேற்று பதிவியேற்றுக்கொண்டார். அப்போது தேர்தலில் தோற்ற ரம்யா மோகன் தமக்கு துணை தலைவர் பதவி வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யாதது தேவையில்லாத சந்தேகங்களுக்கு விழிவகுக்கும் : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் காட்டம்
மதுரை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யாத தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ராப்பத்து திருநாள் தொடக்கம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து ராப்பத்து திருநாள் நேற்று துவங்கியது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 26ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தமிழக கடற்கரை பகுதியில் காற்றாலை அமைப்பது தொடர்பாக ஜன.27ல் மத்திய அரசு ஆலோசனை
டெல்லி: தமிழக கடல் பகுதிகளில் காற்றாலை அமைப்பது குறித்து வருகின்ற 27ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை நடத்துகின்றது. தமிழக கடல் பகுதிகளில் காற்றாலை அமைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக வரும் ஜனவரி 27ம் தேதி மிக முக்கியமான ஒரு ஆலோசனையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய கடலோர ஒழுங்குமுறை அமைப்பு நடத்துகின்றது.
டெல்லி நீதிமன்ற உத்தரவின் மூலம் தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் பேட்டி
டெல்லி: டெல்லி நீதிமன்ற உத்தரவின் மூலம் தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிப்பு
டெல்லி: சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வேறுபாடு இன்றி அனைத்துப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று கடந்த 2018 ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சட்டசபையில் இரங்கல் தீர்மானம்

சென்னை: தமிழக சட்டசபையின் 2வது நாள் கூட்டம் இன்று (ஜன.,07) தொடங்கியது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட மறைந்த முன்னாள் எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார்.
திமுக எம்எல்ஏ அன்பழகன் சஸ்பெண்ட்

சென்னை: சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கும், உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அமைச்சரவை பார்த்து ஜெ.அன்பழகன், ஒருமையில் பேசியதால், அவரை சட்டசபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார்.
நெல்லைக்கு பகல் நேர ரயில் தினமும் இயக்க கோரிக்கை
சென்னை: 'சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு, தினமும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்' என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
'ஒப்போ என்கோ பிரி'
'ஒப்போ, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 புரோ' ஆகியவற்றை அறிமுகம் செய்த கையோடு, 'ஒப்போ என்கோ பிரி' எனும் ஒயர்லெஸ் இயர்போனையும் அறிமுகம் செய்துள்ளது. வியர்வை உள்ளிட்டவற்றால் பாதிக்காத வகையில், இது தயாரிக்கப்பட்டுள்ளது. இரட்டை மைக்ரோபோன் இருப்பதால், அழைப்புகளை தெளிவான ஒலியில் கேட்கலாம்.
'உயரும்' பார்ச்சூனர்
டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் பிஎஸ்--6 மாடல் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான இன்ஜின் இடம் பெறுவதால், விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும்.
நெ.கண்ணன் கைது ஏன்? முதல்வர் விளக்கம்
சென்னை: 'பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய நெ.கண்ணன் விவகாரத்தில், சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது' என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இருநாட்டு உறவு; டிரம்புடன் மோடி பேச்சு

புதுடில்லி: இருநாட்டு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.5 சதவீத பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு கணிப்பு
புதுடில்லி : வரும் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறும் இந்த நிதியாண்டின்(2019 - 20) பொருளாதார வளர்ச்சி(ஜிடிபி) 5 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் ரத்து: ஈரான் அதிரடி
டெஹ்ரான் : வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அரசு ரத்து செய்து அதிரடி நடவிடக்கை எடுத்துள்ளது.
உள்ளாட்சிகளில் 50 சதவீதம்; வந்தது பெண்கள் ஆட்சி

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக நேற்று பொறுப்பேற்றனர்.
ரூ.2,000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்: சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு

சென்னை: ''தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் 2000 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட உள்ளது'' என கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: 'கோவிந்தா' கோஷத்துடன் பரவசம்

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் கோவில்களில் நேற்று திறக்கப்பட்டது.
வாரத்தில் 4 நாட்கள், 6 மணிநேர வேலை: பின்லாந்தில் சலுகை
ஹெல்சின்கி: தினமும் 6 மணிநேரம் வீதம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக பின்லாந்து பிரதமர் சன்னா மரின் அறிவித்துள்ளார்.
Monday, 6 January 2020
வாகன அபராதம்: மாநிலங்களுக்கு கண்டிப்பு
புதுடில்லி: 'போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள அபராதங்களை குறைக்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை' என, மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடில்லி: ''சில மோசடி நிறுவனங்கள் மீது மத்திய அரசு எடுக்கும் கடும் நடவடிக்கையை தொழில் துறையினருக்கு எதிரானதாக பார்க்க கூடாது '' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் வெளிநபருக்கு தடை
சென்னை: ரேஷன் கடைகளில், வெளிநபரை அனுமதிக்க கூடாது; மீறி வருவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவ கல்லுாரி கட்டுமானம்: பொ.ப., துறைக்கு சிக்கல்
சென்னை: புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கான கட்டுமானத்தை துவக்குவதில், பொதுப்பணி துறைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.பொதுப்பணித் துறையில் கட்டடங்கள் பிரிவு வாயிலாக, அரசின் பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
வேகக் கட்டுப்பாட்டு கருவிக்கு தட்டுப்பாடு: எப்.சி.,க்கு சிக்கல்
சென்னை: வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கிடைக்காததால், வணிக வாகனங்களுக்கு, தகுதிச்சான்று பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
Subscribe to:
Comments (Atom)

