சென்னை: ''தொகுதி மேம்பாட்டு நிதியை, எம்.எல்.ஏ.,க்கள் விருப்பப்படி செலவிட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடுவதற்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனவே, நிதியை செலவிடுவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி: தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடுவதில், சில வரைமுறைகள் உள்ளன. எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் விருப்பப்படி தொகுதிக்கு செலவிடலாம் என்ற கோரிக்கை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
துரைமுருகன்: முதல்வர், இப்போதே அதை கூறினால், நன்றாக இருக்கும்.முதல்வர்: தொகுதி மேம்பாட்டு நிதியை, எம்.எல்.ஏ.,க்கள் விருப்பப்படி செலவிட வேண்டும் என்ற, கோரிக்கை பரிசீலிக்கப்படும். இதுதொடர்பாக, உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும்.எந்த அளவிற்கு சாத்தியம் என்பது குறித்து பேசி, சாதகமாக்க முயற்சி செய்கிறேன்.இவ்வாறு, விவாதம் நடந்தது.