பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் வருவதால், டில்லி சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், பா.ஜ., தலைமை உள்ளது.
டில்லி சட்டசபை தேர்தல், பிப்ரவரி, 8ல் நடைபெறவுள்ளது. களத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்முறை, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து, ஆட்சியை தட்டிப் பறித்துவிடும் முனைப்பில், பா.ஜ., உள்ளது. இதற்காக, அக்கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படும் நிலையில், முக்கிய பிரச்னையாக, முதல்வர் வேட்பாளர் விவகாரம் உருவெடுத்துள்ளது.முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, பா.ஜ., தரப்பிலிருந்து இவர் தான் எதிர்க்கிறார் என்ற செய்தியை, மக்களுக்கு தெளிவுபடுத்துவதே நல்லது என, அக்கட்சிக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடி தரப்படுகிறது.
குறிப்பாக, வர்த்தகர்கள் நிறைய உள்ள டில்லியில், இவர்களின் சங்கங்கள், பா.ஜ., தலைமைக்கு, இந்த கோரிக்கையை முன் வைக்கின்றன. கட்சியின் முக்கிய ஓட்டு வங்கியான, இவர்களின் கோரிக்கையை புறந்தள்ள முடியாத நிலையில், பா.ஜ., உள்ளது.கடந்த, 2008 சட்டசபை தேர்தலில், வி.கே.மல்ஹோத்ரா, 2013ல் ஹர்ஷ்வர்த்தன், 2015ல் கிரண் பேடி, என, பா.ஜ., கடைசி நேரத்தில் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து களம் கண்டது.
அதேபோல, இம்முறையும், அந்த நெருக்கடி உருவாகியுள்ளது. இதையடுத்து, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, சில தினங்களுக்கு முன், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது, 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் தான், டில்லியில் அரசு அமைக்கப்போகிறோம்; இதை நினைவில் கொள்ளுங்கள்' என்றார்.
இதன் மூலம், இம்முறை, முதல்வர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தி உணர்த்தப்பட்டாலும், அறிவிக்க வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.'கருத்துக் கணிப்புகளின்படி, ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பிரதமரை முன்னிறுத்துவது சரியல்ல. முடிவுகள் வேறு மாதிரியானால், அது பிரதமரின், 'இமேஜை' பாதிக்கும்' என்ற வாதம் வைக்கப்படுகிறது.
'குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து என, தேசிய அளவிலான பிரச்னைகள் தான், பா.ஜ.,வுக்கு கைகொடுக்கும். முதல்வர் வேட்பாளரை அறிவித்தால், இவை எல்லாம் பின்தள்ளப்பட்டு விடும். 'எனவே, முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், தேர்தலை சந்திப்பதே சரி' என, எதிர்வாதம் வைக்கப்படுகிறது.ஆனால், முதல்வர் வேட்பாளராக யாரையாவது அறிவித்தால், அது கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என, தலைமை கருதுகிறது.
இதற்கு காரணம், கட்சியில், ஹர்ஷ்வர்த்தன், விஜய் கோயல், மீனாட்சி லேகி, மனோஜ் திவாரி என, பல கோஷ்டிகள் இருப்பது தான்.இதனால், குழப்பத்தில் சிக்கியுள்ள பா.ஜ., தலைமை, வழக்கம்போல கடைசி நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விடலாமா என்ற தீவிர யோசனையிலும், குழப்பத்திலும் ஆழ்ந்துஉள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன