Thursday, 9 January 2020

பெண்ணை காப்பாற்ற உயிர் துறந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்

சென்னை: ''பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த, இளைஞர் குடும்பத்திற்கு, ௧௦ லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.


  பெண்ணை காப்பாற்ற உயிர் துறந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்

சட்டசபையில், அவர் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், இவரது மனைவி பவானி.டிரைவர் கைதுஇவர், 2019 டிசம்பர், 25ல், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கூட்ரோட்டிலிருந்து, இரவு பணி முடிந்து, வீடு திரும்ப ஆட்டோவில் சென்றார்.அப்போது, ஆட்டோ டிரைவர், வழி மாறி வேறு பாதையில் செல்வதை கண்டார். தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். 

அவரது சத்தம் கேட்டு, சாலையோரம் நின்ற இளைஞர்கள் ஏகேஷ், எஸ்தர் பிரேம்குமார், வினீத், துரைராஜ், பிரிஸ்டன் பிராங்களின் ஆகியோர், இரு சக்கர வாகனத்தில், ஆட்டோவை துரத்தி சென்றனர்.அப்போது, ஆட்டோவிலிருந்து பவானி குதித்தார். அங்கிருந்த மக்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறு காயமடைந்த அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், ஆட்டோ டிரைவரை பிடிக்க முயற்சித்தபோது, விபத்துக்குள்ளாயினர். இதில் பலத்த காயமடைந்த, ஏகேஷ் இறந்தார்; மற்றவர்கள் காயமடைந்தனர். அதன்பின், ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இதுபோன்ற நிகழ்வுகளில், இளைஞர்களும், பொது மக்களும், தவறை தட்டி கேட்கவும், போராடவும், துணிச்சலுடன் செயல்படுவது, மிகவும் பாராட்டுக்குரியது. இச்சம்பவத்தில் உயிரிழந்த ஏகேஷ் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.பலத்த காயம்பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரிஸ்டன் பிராங்களினுக்கு, 2 லட்சம் ரூபாய்; லேசான காயமடைந்த, எஸ்தர் பிரேம்குமார், வினித், துரைராஜ் ஆகியோருக்கு, தலா, 25ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தாலுகா, சொக்கம்பட்டி கிராமத்தில், போலீஸ் வாகனம் மோதியதில், ஆயிஷாபானு என்பவர் இறந்தார். கன்சால் மகரிபா, இர்பானா ஆஷியா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.ஏற்கனவே, ஆயிஷாபானு குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்த, இரு பெண்கள் குடும்பத்திற்கும், தலா, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டசபை தொகுதி, தெத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேலுசாமி மகன் முருகன், யானை தாக்கி இறந்தார். அவரது குடும்பத்திற்கு, 4 லட்சம் ரூபாய், வனத்துறை சார்பில் வழங்கப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.