கோதுமை புட்டு
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்,
சர்க்கரை - 1/4 கப்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உடைத்த முந்திரித்துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்.
செய்முறைகோதுமை மாவு - 1 கப்,
சர்க்கரை - 1/4 கப்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உடைத்த முந்திரித்துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்.
கோதுமை மாவினை வெறும் வாணலியில் வாசனை (லேசாக வர ஆரம்பிக்கும் வரை) வறுக்கவும். சூடாக இருக்கும்போதே தண்ணீர் தெளித்து கைகளால் பிடிக்கும் பதம் வந்ததும் இட்லி பானையில் இட்லித்தட்டில் ஆவியில் 8 நிமிடங்கள் வேக விட்டு வைத்திருந்து எடுத்து கைகளால் உதிர்த்து விடவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து ஏலப்பொடி சேர்த்து நெய்யில் தேங்காய்த்துருவல், முந்திரித்துண்டுகள் வறுத்து அதனையும் சேர்த்துக் கலந்து விடவும்.
எள் சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
அலங்கரிக்க வறுத்த வேர்க்கடலை - 1 டீஸ்பூன்.
பொடிக்கு...
எள் - 1/4 கப்,
காய்ந்தமிளகாய் - 2,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.
தாளிக்க...
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5 இலைகள்.

எப்படிச் செய்வது?
பொடிக்கு கொடுத்ததை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் + நெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, பொடித்த பொடி, உப்பு, சாதம் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தவும். வேர்க்கடலையை தூவி பரிமாறவும்.
நவதானிய நியூட்ரி லட்டு
தேவையான பொருட்கள்
தினை - 30 கிராம்,
கம்பு - 30 கிராம்,
ராகி - 30 கிராம்,
பச்சை பயறு - 30 கிராம்,
சோளம் - 30 கிராம்,
சம்பா கோதுமை - 30 கிராம்,
வெள்ளைச் சோளம் - 30 கிராம்,
பாதாம் - 30 கிராம்,
குதிரைவாலி - 30 கிராம்,
வெல்லம் (தூள்) - 250 கிராம்,
நெய் - 50 கிராம்,
ஏலக்காய் - 10 கிராம்,
முந்திரி - 50 கிராம்,
திராட்சை - 50 கிராம்.
தினை - 30 கிராம்,
கம்பு - 30 கிராம்,
ராகி - 30 கிராம்,
பச்சை பயறு - 30 கிராம்,
சோளம் - 30 கிராம்,
சம்பா கோதுமை - 30 கிராம்,
வெள்ளைச் சோளம் - 30 கிராம்,
பாதாம் - 30 கிராம்,
குதிரைவாலி - 30 கிராம்,
வெல்லம் (தூள்) - 250 கிராம்,
நெய் - 50 கிராம்,
ஏலக்காய் - 10 கிராம்,
முந்திரி - 50 கிராம்,
திராட்சை - 50 கிராம்.
செய்முறை
மேற்கூறிய நவதானியங்களை லேசாக வறுத்து பொடித்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் நெய்யை சூடு செய்து முந்திரி, திராட்சையை லேசாக வறுத்து எடுக்கவும். மேற்கூறிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து, வறுத்த நெய் கலவையை அதில் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். நவதானிய நியூட்ரி லட்டு தயார்.