சென்னை: ''தமிழகம், உணவு உற்பத்தியில், ஒரு புதிய மைல் கல்லை எட்டும். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக, வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சட்டசபையில், முதல்வர் பேசியதாவது: குடிமராமத்து திட்டத்தின் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகள் பராமரிப்பில் உள்ள, 1,315 நீர் நிலைகள், 812 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர, ஆறுகள், ஓடைகள், கால்வாய் போன்றவற்றில், 114 கோடி ரூபாயில், 59 பெரிய தடுப்பணைகள், 40 ஆயிரம் சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், சரியான நேரத்தில் செய்து கொடுத்ததால், இந்த ஆண்டு, 97.31 லட்சம் ஏக்கரில், வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட, 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு, உணவு தானிய உற்பத்தியில், தமிழகம், புதிய மைல் கல்லை அடையும்.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், மூன்று ஆண்டுகளில், தமிழக விவசாயிகளுக்கு, 7,283 கோடி ரூபாய், பயிர் இழப்பீட்டு நிதி பெற்று தரப்பட்டுள்ளது. இது, தேசிய அளவில் சாதனையாகும். எட்டு ஆண்டுகளில், ஆறாவது முறையாக, உணவு தானிய உற்பத்தியில், 100 லட்சம் டன்னை தாண்டி, தமிழகம் சாதனை புரிந்துள்ளது. தமிழகத்தில், அன்னிய நேரடி முதலீடு, 1.33 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 1.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, 47 ஆயிரம் கோடி ரூபாய், அன்னிய நேரடி முதலீட்டை அரசு ஈர்த்துள்ளது.கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் கூட்டத்தை விரைவாக நடத்தி, ஒப்புதல் பெறும்படி, பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன்.
காவிரி - குண்டாறு திட்டத்தின், முதல்கட்ட பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதியை துாய்மையாக்கும் திட்டத்தை, மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைக்கு, தீர்வு கண்டது போல், தென்பெண்ணையாறு பிரச்னைக்கும், தீர்வு காணப்படும்.பெண்கள் வன்கொடுமை, குழந்தைகள் பாலியல் தொல்லை போன்ற வழக்குகளில், விரைந்து நீதி கிடைக்க, 16 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டு, மூன்று இயங்கி வருகின்றன. மீதமுள்ள, 13 நீதிமன்றங்கள், விரைவில் செயல்பாட்டிற்கு வரும். 2018 - 19ம் ஆண்டிற்கான, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, 8.17 சதவீதமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
'தமிழகத்தில் விருது மழை'
''தமிழகத்தில், விருது மழை பொழிந்து கொண்டிருக்கிறது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சிக்கு கிடைத்த வெற்றி மாலைகளை கண்டு, பொறுக்க முடியாமல், சில எதிர்க்கட்சியினர், ஆட்சி காலத்தை குறைத்து மதிப்பிட்டனர். அவர்களின் எண்ணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று விருது மழை பொழிகிறது.மக்கள் நம் பக்கம் உள்ளதை, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி தெளிவாக்குகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல், அதை உறுதிப்படுத்தி உள்ளது.
வரவிருக்கிற உள்ளாட்சி தேர்தலிலும், 2021 சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும். அ.தி.மு.க., 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறுபான்மையின மக்களுக்கு, அரணாக இருந்து வருகிறது. தொடர்ந்து, பாதுகாப்பு அரணாக விளங்கும். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் வதந்திகளை, சிறுபான்மையின மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.