சென்னை: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தாண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டம், கவர்னர் உரையுடன், 6ம் தேதி துவங்கியது.அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து, பல்வேறு அறிவிப்புகளை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். தொடர்ந்து, 7ம் தேதி முதல் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, விவாதம் துவங்கியது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 8ம் தேதி கவர்னர் உரை குறித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள், உரிய விளக்கம் அளித்தனர். இறுதியாக, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று பேசினார்.
இதையடுத்து, 15 புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.சபை முன்னவரான துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபையை ஒத்திவைக்கும் தீர்மானம் எடுத்து வந்தார். இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் சபையை, சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார்.