ஆமதாபாத்: உரிய ஆவணம் இல்லாததால் காவல்துறையினர் பறிமுதல் செய்த காருக்கு ரூ.27.68 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச அபராதம் இது தான்.

குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு ஆமதாபாதில் 2017ம் ஆண்டு நவ.28ல் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முறையான ஆவணம் இல்லாமல் வந்த இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான காரை பறிமுதல் செய்தனர். உரிய அபராதம் கட்டிகாரை பெற்றுக்கொள்ளுமாறு அதன் உரிமையாளர் ரஞ்சித் தேசாய்க்கு 'நோட்டீஸ்' தரப்பட்டது.
ரஞ்சித் ஆமதாபாத் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 27.68 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தினார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி எம்.பி.விர்ஜா கூறியதாவது: ரஞ்சித் தேசாய்க்கு சொந்தமான காரை சோதனை செய்தபோது அதில் பதிவு எண் ஆவணம் இல்லை. இதற்கு முதலில் 9.8 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை அவர் செலுத்தசென்ற போது ஆர்.டி.ஓ. அதிகாரிகள் காரின் பழைய ஆவணங்களை பரிசோதனை செய்தனர்.

அப்போது காருக்கு வாழ்நாள் வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அதற்காக 16 லட்ச ரூபாய் அதற்கு வட்டி 7.68 லட்ச ரூபாய் அபராதம் நான்கு லட்ச ரூபாய் என மொத்தம் 27.68 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்தியாவில் மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.
அதிபட்ச அபராதம் என்பதால் ரஞ்சித் செலுத்திய தொகைக்கான ரசீதின் புகைப்படத்தை ஆமதாபாத் போக்குவரத்து போலீசார் தங்கள் 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.