சென்னை: ''மாநகராட்சி பகுதிகளில் படிப்படியாக தரைவழி கேபிள் வாயிலாக மின்சாரம் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்'' என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க. - மெய்யநாதன்: ஆலங்குடி தொகுதி கத்தக்குறிச்சி ஊராட்சி கண்ணாயப்பட்டியில் புதிய மின்மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் தங்கமணி: ஏற்கனவே இரண்டு மின்மாற்றிகள் உள்ளன. புதிதாக ஒரு மின்மாற்றி அமைக்கப்படும். மெய்யநாதன்: என் தொகுதியில் 20 ஊராட்சிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும். இதற்காக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மின் வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அமைச்சர் தங்கமணி: டெல்டா மாவட்டங்களில் மின்னழுத்த குறைபாடு பிரச்னை உள்ளது. நீண்ட துாரம் செல்லும் மின் கம்பிகள் தான் இதற்கு காரணம். இடமிருந்தால் ஆய்வு செய்து துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
தி.மு.க. - கார்த்திகேயன்: வேலுார் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: மாநகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை படிப்படியாக தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறையுடன் கலந்து பேசி வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தரை வழி கேபிள்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.