Thursday, 9 January 2020

குமரி அனந்தன் கோரிக்கை

சென்னை: 'உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் எல்லைக்குள் மதுவுக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:


சேலம் நகராட்சி தலைவராக ராஜாஜி இருந்தபோது நகராட்சி எல்லைக்குள் மது தயாரிக்கவோ விற்கவோ குடிக்கவோ தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினார். நான் உட்பட 56 ஆயிரம் பேர் சிறை சென்றோம். இப்போது உள்ளாட்சிக்கு அனைத்து மட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களும் தேர்வாகப் போகிறவர்களும் முதல் கூட்டத்தில் காந்தி விரும்பியதை காமராஜரும் அண்ணாதுரையும் விரும்பியதை நிறைவேற்ற வேண்டும்.

அதாவது 'எங்கள் ஊராட்சி நகராட்சி மாநகராட்சி எல்லைக்குள் மது உற்பத்திக்கும் விற்பனைக்கும் குடிப்பதற்கும் தடை விதிக்கிறோம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.