ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370 ஆவது சட்டபிரிவின் படி அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நேரில் ஆய்வு செய்ய வெளிநாட்டு தூதர்கள் 16 பேர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் அங்கு வருகை தந்தனர்.
ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட அவர்களை, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கள் தூதர்கள் மற்றும் அதிகாரிகளிடம், காஷ்மீர் குறித்து பாக்., பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்வதாக குற்றம் சாட்டினர். ஜம்மு காஷ்மீரில் வன்முறையை பரப்புவதற்கு பாக்., வெகுவாக முயற்சித்தது,
ஆனால் அது முடியாமல் போனதால் அது விரக்தியடைந்துள்ளது. காஷ்மீரில் இருந்து ஒரு அங்குல நிலத்தை கூட பாகிஸ்தானால் பறிக்க முடியாது என்று அவர்கள் தூதர்களிடம் தெரிவித்தனர். இதை பாக்கிடம் எடுத்துச் சொல்லும் படி அவர்கள் கோரிக்கை வைத்தனர்

அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் ((Kenneth Juster)), தென்கொரிய தூதுவர் ஷின் போங் கில் ((Shin Bong-kil)0, நார்வே தூதுவர் ஹான்ஸ் ஜேக்கப் ஃபிரைடெலுன்ட் ((Hans Jacob Frydenlund)), மற்றும் நார்வே, வியட்நாம், அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்களும் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
