5 சபைகள், 6 அபிஷேகங்கள், 9 தாண்டவங்கள்... ஆருத்ராநாளில் அறிந்துகொள்ள வேண்டிய அற்புத தகவல்கள்!
வீசிய இடக்கை ‘கஜஹஸ்தம்.’ அதன் ஒரு விரல் தூக்கிய திருவடியைக் காட்டிக்கொண்டிருக்கும். எடுத்த திருவடி பிறவிக் கடலில் தத்தளிக்கும் உயிர்களை மீட்டு அருளும். ஊன்றிய திருவடி ஆணவம், கன்மம், மாயை என்னும் நம்முள் இருக்கும் மாயைகளின் உருவகமான முயலகனை அழித்து மறைத்தல் தொழிலைச் செய்யும்.
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான சிவபெருமானின் திருவடிவங்களில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை நடனத் திருக்கோலத்தின் வழியே வெளிப்படுத்தும் அற்புதக் கோலம் நடராஜப் பெருமானுடையது.
ஆதிரைப் பெருநாளில் அபிஷேகம் கொள்ளும் அந்த நடராஜப் பெருமான் குறித்த அற்புதத் தகவல்கள் சிலவற்றை தியானிப்போம்.

நடராஜப் பெருமானின் தோற்றம் உணர்த்தும் தத்துவங்கள்
நடராஜரின் திருமுகம் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையில்லா அழகை விளக்குவது. சிவந்த சடை, தவ ஒழுக்கத்தையும் சடையில் உள்ள கங்கை அவனின் பெருங்கருணையையும் குறிப்பது. அவன் முடியில் சூடிய சந்திரன், சரணாகதி அடைந்தவர்கள் அடையும் உயர்நிலையை விளக்குகிறது.
வளைந்த புருவம் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கும் கருணையையும், குமிண் சிரிப்பு தன் அடியவர்களை அருளுடன் வரவேற்கும் பண்பையும் பிரதிபலிப்பது. அவன் அக்னி வடிவானவன் என்பதைப் பவள மேனியையும், பால் வெண்நீறு மனித வாழ்க்கை இறுதியில் பஸ்பமாகவே மாறும் என்பதையும் குறிக்கின்றன.
நீலகண்டமும் நெற்றிக்கண்ணும் பரமனின் தனித்துவமான அடையாளம். உடுக்கை ஒலி இந்த உலகைப் படைத்தலை உணர்த்தும். பிறவிப் பிணி தீர்க்கும் அக்னிச் சுடர் அவன் இடக்கையில் உள்ளது.
அமைந்த கை அபயகரம் என்பர். `நீவிர் அஞ்சற்க. யாம் உம்மைக் காக்கிறோம்’ எனத் தன் அடியவர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை. காத்தல் தொழிலைக் காட்டும். வீசிய இடக்கை `கஜஹஸ்தம்.’ அதன் ஒரு விரல் தூக்கிய திருவடியைக் காட்டிக்கொண்டிருக்கும்.
எடுத்த திருவடி பிறவிக் கடலில் தத்தளிக்கும் உயிர்களை மீட்டு அருளும். ஊன்றிய திருவடி ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று விதமாக நம்முள் இருக்கும் மாயைகளின் உருவகமான முயலகனை அழித்து மறைத்தல் தொழிலைச் செய்யும்.

அல்லல்கள் அகற்றும் ஆறு அபிஷேகங்கள்
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். பல ஆலயக் கருவறைகளில் சிவலிங்கத்தின் மீது எப்போதும் ஜலதாரை பொழியக் காணலாம். ஆனால், நடராஜ ரூபத்துக்கோ ஓர் ஆண்டில் ஆறுதினங்களே அபிஷேகங்கள்.
ஆறும் ஆறு அற்புத தினங்கள்.1. மாசி சதுர்த்தசி, 2. சித்திரை திருவோணம், 3. ஆனி உத்திரம், 4. ஆவணி சதுர்த்தசி, 5. புரட்டாசி சதுர்த்தசி, 6. மார்கழி திருவாதிரை இந்தத் தினங்களில் அபிஷேகம் கண்டு அந்த அண்ணாமலையானை வேண்டிக்கொள்ள அனைத்துத் துன்பங்களும் தீரும் என்பது ஐதிகம்.
5 சபைகள் ஐந்தொழில் தாண்டவங்கள்
நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து. ரத்தின சபை – திருவாலங்காடு, கனகசபை – சிதம்பரம், ரஜதசபை – (வெள்ளி சபை) – மதுரை, தாமிரசபை – திருநெல்வேலி, சித்திரசபை – திருக்குற்றாலம் ஆகியன. இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தின் மூலம் ஐந்தொழில்களைப் புரிகிறான் என்கின்றன சாஸ்திரங்கள்.
படைத்தல் - காளிகாதாண்டவம், காத்தல் - கவுரிதாண்டவம், அழித்தல் - சங்கார தாண்டவம், மறைத்தல் - திரிபுர தாண்டவம், அருளல் - ஊர்த்துவ தாண்டவம் ஆகிய ஐந்தொழில்களையும் ஐந்து நடனத்தின் மூலம் நிகழ்த்துவதாக ஐதிகம்.

ஆருத்ரா நாளில் அற்புத தரிசனம்
அனைத்து சிவன் கோயில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சந்நிதியில் எழுந்தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதிகம். சிதம்பரத்தில் இந்தத் திருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறும்.
இந்த நாளில் சிவதரிசனமும் நடராஜர் அபிஷேக தரிசனமும் காண்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க வாழ்வில் அனைத்துப் பிணிகளும் தீரும். வறுமை அகலும். செல்வம் சேரும். பிறவிப் பிணி என்னும் பெரு நோயும் அகலும் என்று பாடுகின்றன திருமறைகள்.
திருவாதிரை களியும் திருப்பல்லாண்டும்
திருவாதிரை என்றதும் நம் நினைவுக்கு வருவன திருவாதிரைக் களியும் திருப்பல்லாண்டும். சிவ வழிபாட்டில் பஞ்சபுராணங்கள் பாடுவது மரபு. பஞ்சபுராணங்களில் ஒன்று திருப்பல்லாண்டு. இந்தத் திருப்பல்லாண்டைப் பாடியவர் சேந்தனார் என்னும் நாயனார். இவர் சிதம்பரத்தில் வாழ்ந்த அடியார்.
விறகுவெட்டி வாழும் எளிய வாழ்க்கை கொண்டவர் என்றபோதும் தினமும் சிவனடியார்க்கு அமுது செய்விக்கும் வழக்கம் உடையவராய் இருந்தார். சிவபெருமான் இவரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு பெருமழை நாள் ஒன்றில் சிவனடியாராக மாறி இவரின் இல்லம் சென்று உணவு வேண்டினார்.
வீட்டில் விருந்து சமைக்கப் பொருள்கள் இல்லை. இருந்தாலும் இருக்கும் பொருள்களைக் கொண்டு களி செய்து படைத்தார். அந்தக் களியமுதை ருசித்த இறைவன் மறுநாள் சேந்தனின் புகழை உலகுக்கு உணர்த்தத் திருவுளம் கொண்டார்.
அப்போது நாட்டை ஆண்ட மன்னன் கண்டராதித்த சோழன். தினமும் இரவு பூஜைக்குப் பின் நடராஜர் நடமிடும் சிலம்போசையைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர். இறைவன் சேந்தனாரின் இல்லத்துக்கு உண்ணச் சென்ற காரணத்தால் அன்று சிலம்பொலிக்கவில்லை. இதனால் வருத்தம் கொண்டிருந்தான் சோழன். அவன் வருத்தம் தீர்க்குமாறு அசரீரியாய் ஈசன் சேந்தன் இல்லம் சென்று களி உண்ட நிகழ்வைச் சொல்லி விளக்கினார்.
சிவனே வேண்டி உண்டார் என்றால் அந்தச் சேந்தன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருப்பார் என்று வியந்தான். மறுநாள் தில்லையில் தேரோட்டம். தேர் ஓடத்தொடங்கி ஓரிடத்தில் நின்றுவிட்டது. என்ன செய்தும் தேர் நகரவில்லை. அப்போது சிவபெருமான் அசரீரியாய், "சேந்தனே திருப்பல்லாண்டு பாடு, தேர் நகரும்" என்றார்.
அப்போது எளியவர்க்கு எளியவராய் ஒதுங்கி நின்ற சேந்தன் தேர் முன்னே வந்து நின்று பாடத்தொடங்கினார். 'மன்னுக தில்லை...' என்று தொடங்கும் இந்தப் பல்லாண்டில் மொத்தம் 13 பாடல்கள். சேந்தனார் பல்லாண்டு பாடினார். என்ன ஆச்சர்யம். தேர் நகர்ந்தது. சேந்தன் புகழ் உலகெங்கும் பரவியது.
இப்படிக் கிடைத்ததுதான் திருப்பல்லாண்டு. இந்தப் பாடல்களைப் பாட நமக்குக் கிடைக்கும் பலன்கள் பலகோடி. திருவாதிரைக்கு சேந்தனின் நினைவாகத்தான் களி செய்து சமர்ப்பிக்கிறோம்.
இன்று திருவாதிரை. இன்று தவறாமல் சிவாலயம் சென்று நடராஜப் பெருமானை வழிபட்டு நம்மைப் பீடித்திருக்கும் கவலைகளிலிருந்தும் பிணிகளிலிருந்தும் வறுமையிலிருந்தும் விடுபடுவோம். சிவனருள் நம்மை வழிநடத்தட்டும்.
குலதெய்வத்தை கண்டறிவதற்கான எளிய வழிபாடு முறைகள்
மனிதன் தீராத பிரச்னைகளால் அகப்பட்டு தவிக்கும்போது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குலதெய்வ கோயிலிற்கு சென்று வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவார்கள். இதில் ஒரு சிலருக்கு குலதெய்வம் என்னவென்றே தெரியாததால் மேலும் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றன. இந்த பதிவில் குலதெய்வத்தை கண்டறியும் முறைகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்ட வேண்டும்.
பின்பு “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும். இன்னொரு முறையும் இருக்கிறது.
உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும். இது தவிர மூத்த பிள்ளையின் ஜாதகத்தை வைத்து குலதெய்வம் ஆண் தெய்வமா அல்லது பெண் தெய்வமா, நிலத்தில் வாழும் தெய்வமா அல்லது மலையில் வாழும் தெய்வமா, உக்ர தெய்வமா அல்லது சாந்த தெய்வமா போன்ற விவரங்களை அறிய முடியும்.

நாகவடிவில் அருள்பாலிக்கும் எல்லையம்மன்
புதுச்சேரி கோர்க்காடு
சித்தர்கள் பல அற்புதங்களை படைத்தவர்கள் என்ற பெயருண்டு. அவர்களின் மருத்துவம் பிரசித்தி பெற்றது. பல கோயில்களில் சித்தர்களுக்கு தனியாக சிலை வைத்து மக்கள் வழிபடு கின்றனர்.
சித்தர்கள் பல அற்புதங்களை படைத்தவர்கள் என்ற பெயருண்டு. அவர்களின் மருத்துவம் பிரசித்தி பெற்றது. பல கோயில்களில் சித்தர்களுக்கு தனியாக சிலை வைத்து மக்கள் வழிபடு கின்றனர்.
அந்த வகையில் சித்தர்களில் ஒருவரான கோரக்கர் வசித்த காடு புதுச்சேரி அருகே உள்ளது. இது நாளடைவில் மருவி “கோர்க்காடு” என்று பெயர் பெற்று விளங்குகிறது.
முன்னொரு காலத்தில் அம்மன் நாக வடிவில் பக்தர் ஒருவருக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்பு அந்த இடத்தில் நாகத்தை கற்சிலையாக வைத்து அம்மன் சிலை அமைத்து பொதுமக்கள் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். அந்த அம்மனின் பெயர் எல்லையம்மன்.
நாக வடிவில் அம்மன்
புதுவை மாநிலத்தில் அம்மன் நாக வடிவில் இங்கு மட்டுமே இருப்பது இக்கோயிலின் சிறப்பு. பின்னர் 1897 ல் கோயில் முன் மண்டபம் அமைத்தும் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நாக வடிவில் அம்மன்
புதுவை மாநிலத்தில் அம்மன் நாக வடிவில் இங்கு மட்டுமே இருப்பது இக்கோயிலின் சிறப்பு. பின்னர் 1897 ல் கோயில் முன் மண்டபம் அமைத்தும் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் முறையே 1938 ஜூன் மாதம் 12 ம்தேதியும் தொடர்ந்து 21-6-1991 மற்றும் 3-4-2006 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு அனைத்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நாக வடிவில் உள்ள சர்ப்பத்திற்கு மட்டுமே செய்யப் படுகிறது.
சிறப்புகள்
தை மூன்றாம் வெள்ளி மற்றும் ஆடி மூன்றாம் வெள்ளி நாக வடிவில் உள்ள சர்ப்பத்திற்கு தங்க கவசமும் நிலை அம்மனுக்கு வெள்ளி கவசமும் அணிவிக்கப்படுகிறது. துணை கோயிலான கோவனேஸ்வரர் ஆலயம் 18 சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ கோரக்கர் சித்தரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்படுகிறது.

மேலும் கோரக்கர் கோர்க்காட்டிலும் ஜீவசமாதி அடைந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கிறது. இங்குள்ள கோயில் கோபுரம் 31 அடி உயரம் கொண்டது. கோயில் குளம் 80 அடி அகலம், 95 அடி நீளம் கொண்டது. பிரதான ராகு ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் உள்ள எல்லையம்மனை வணங்கினால் திருமணத்தடை அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
ராகு கேது தோஷ நிவர்த்தி பெற அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை ராகுகால பூஜையில் அம்மனை தரிசித்தால் சகல கடாட்சங்களும் ( செல்வங்கள்) வந்து சேரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
தேரோட்டம்
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கோர்க்காடு சக்கரவர்த்தி (ஏ) செல்லமுத்து என்பவர் 27 அடி உயரம் கொண்ட தேர் செய்து வைத்தார். பின்னர் தானே புயலின் போது தேர் சேதம் அடைந்ததால் ரூ. 12 லட்சம் செலவில் 31 அடி உயரத்தில் தேர் சீரமைக்கப்பட்டு ஆண்டு தோறும் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.
செல்வது எப்படி?
புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து வில்லியனூர் வழியாக சென்றால் 15 கிமீ தூரத்தில் கோர்க்காடு உள்ளது.