சென்னை: துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்ட, மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டோ பாதுகாப்பு, இன்று முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, 'ஒய் பிளஸ்' பாதுகாப்பும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பும் வழங்கப் பட்டன. துணை முதல்வர் வெளியில் செல்லும் போது, மூன்று கமாண்டோக்கள் உடன் செல்வர். வீட்டில் மூன்று பேர் பாதுகாப்பு பணியில் இருப்பர். வெளியூர் செல்லும் போது, கூடுதல் கமாண்டோக்கள், பாதுகாப்பிற்கு உடன் செல்வர். அதேபோல், ஸ்டாலினுக்கும், மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டோ வீரர்கள், பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
தற்போது, நாடு முழுவதும், வி.ஐ.பி., களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை, மத்திய அரசு விலக்கி வருகிறது. அந்த வகையில், பன்னீர்செல்வம், ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்ட, மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பை விலக்கிக் கொள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.எனவே, இன்று முதல், அவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதற்கு பதிலாக, தமிழக போலீசார் சார்பில், கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.