Tuesday, 7 January 2020

சி.ஏ.ஏ. எதிர்ப்பு கோலம் போட்டவர்கள் கைது... சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

சென்னை: அடுத்தவர்கள் வீட்டில் கோலம் போடுவதாக புகார் வந்ததால் தான் சென்னையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தஞ்சை தமிழ் பல்கலை. துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை

மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

கிருஷ்ணகிரி அருகே ஊராட்சி தலைவர் பதவியேற்பில் மோதல்... வீடு, வாகனங்கள் அடித்து உடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்ப்பு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக வெடித்தது. மூங்கிலேறி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றி உஷா ராணி நேற்று பதிவியேற்றுக்கொண்டார். அப்போது தேர்தலில் தோற்ற ரம்யா மோகன் தமக்கு துணை தலைவர் பதவி வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யாதது தேவையில்லாத சந்தேகங்களுக்கு விழிவகுக்கும் : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் காட்டம்

மதுரை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யாத தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் ராப்பத்து திருநாள் தொடக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து ராப்பத்து திருநாள் நேற்று துவங்கியது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி  விழா கடந்த மாதம் 26ம் தேதி  திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

தமிழக கடற்கரை பகுதியில் காற்றாலை அமைப்பது தொடர்பாக ஜன.27ல் மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: தமிழக கடல் பகுதிகளில் காற்றாலை அமைப்பது குறித்து வருகின்ற 27ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை நடத்துகின்றது. தமிழக கடல் பகுதிகளில் காற்றாலை அமைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக வரும் ஜனவரி 27ம் தேதி மிக முக்கியமான ஒரு ஆலோசனையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய கடலோர ஒழுங்குமுறை அமைப்பு நடத்துகின்றது.

டெல்லி நீதிமன்ற உத்தரவின் மூலம் தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் பேட்டி

டெல்லி: டெல்லி நீதிமன்ற உத்தரவின் மூலம் தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிப்பு

டெல்லி: சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வேறுபாடு இன்றி அனைத்துப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று கடந்த 2018 ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சட்டசபையில் இரங்கல் தீர்மானம்


                                   TNAssembly, Speaker, சட்டசபை, இரங்கல், தீர்மானம்

சென்னை: தமிழக சட்டசபையின் 2வது நாள் கூட்டம் இன்று (ஜன.,07) தொடங்கியது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட மறைந்த முன்னாள் எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார்.

திமுக எம்எல்ஏ அன்பழகன் சஸ்பெண்ட்

                               Anbazhagan, Suspend, TNAssembly, DMK, திமுக, அன்பழகன், சட்டசபை, சஸ்பெண்ட்,

சென்னை: சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கும், உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அமைச்சரவை பார்த்து ஜெ.அன்பழகன், ஒருமையில் பேசியதால், அவரை சட்டசபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார்.

பொங்கலுக்கு 29,213 சிறப்பு பஸ்கள்


Pongal, SpecialBus, Minister, VijayaBaskar, பொங்கல், சிறப்பு, பேருந்து, அமைச்சர், விஜயபாஸ்கர்
சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,12 முதல் 14 வரை 29,213 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

நெல்லைக்கு பகல் நேர ரயில் தினமும் இயக்க கோரிக்கை

சென்னை: 'சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு, தினமும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்' என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

'ஒப்போ என்கோ பிரி'

'ஒப்போ, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 புரோ' ஆகியவற்றை அறிமுகம் செய்த கையோடு, 'ஒப்போ என்கோ பிரி' எனும் ஒயர்லெஸ் இயர்போனையும் அறிமுகம் செய்துள்ளது. வியர்வை உள்ளிட்டவற்றால் பாதிக்காத வகையில், இது தயாரிக்கப்பட்டுள்ளது. இரட்டை மைக்ரோபோன் இருப்பதால், அழைப்புகளை தெளிவான ஒலியில் கேட்கலாம்.

'உயரும்' பார்ச்சூனர்

டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் பிஎஸ்--6 மாடல் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான இன்ஜின் இடம் பெறுவதால், விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும்.

நெ.கண்ணன் கைது ஏன்? முதல்வர் விளக்கம்

சென்னை: 'பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய நெ.கண்ணன் விவகாரத்தில், சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது' என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இருநாட்டு உறவு; டிரம்புடன் மோடி பேச்சு




புதுடில்லி: இருநாட்டு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

5 சதவீத பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு கணிப்பு

புதுடில்லி : வரும் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறும் இந்த நிதியாண்டின்(2019 - 20) பொருளாதார வளர்ச்சி(ஜிடிபி) 5 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் ரத்து: ஈரான் அதிரடி

டெஹ்ரான் : வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அரசு ரத்து செய்து அதிரடி நடவிடக்கை எடுத்துள்ளது.

உள்ளாட்சிகளில் 50 சதவீதம்; வந்தது பெண்கள் ஆட்சி

                                      LocalBodyElection,Ladies,உள்ளாட்சி,பெண்கள்_ஆட்சி

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக நேற்று பொறுப்பேற்றனர்.

ரூ.2,000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்: சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு

                                     TamilNadu,Governor,TN,சட்டசபை,கவர்னர்,பன்வாரிலால்,ஆளுநர்

சென்னை: ''தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் 2000 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட உள்ளது'' என கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: 'கோவிந்தா' கோஷத்துடன் பரவசம்

                                    சொர்க்கவாசல்,திறப்பு,கோவிந்தா

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் கோவில்களில் நேற்று திறக்கப்பட்டது.

வாரத்தில் 4 நாட்கள், 6 மணிநேர வேலை: பின்லாந்தில் சலுகை

                              

ஹெல்சின்கி: தினமும் 6 மணிநேரம் வீதம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக பின்லாந்து பிரதமர் சன்னா மரின் அறிவித்துள்ளார்.