Tuesday, 7 January 2020

'உயரும்' பார்ச்சூனர்

டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் பிஎஸ்--6 மாடல் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான இன்ஜின் இடம் பெறுவதால், விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும்.

                                              

இதன் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு. 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் மாடல் அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் தரும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படும். ரியர் வீல் டிரைவ் அல்லது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

பிஎஸ்-6 தரத்திலான டொயோட்டா பார்ச்சூனர் கார், பிப்ரவரி அல்லது மார்ச்சில் விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது. தற்போது ரூ.27.83 லட்சம் - 33.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது. பிஎஸ்-6 மாடல் விலை ரூ. 5 லட்சம் வரை அதிகரிக்கப்படலாம்.