Tuesday, 7 January 2020

அணுசக்தி ஒப்பந்தம் ரத்து: ஈரான் அதிரடி

டெஹ்ரான் : வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அரசு ரத்து செய்து அதிரடி நடவிடக்கை எடுத்துள்ளது.



                            
அதிக அளவில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஈரான் அரசுடன் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணு ஆயுத பயன்பாட்டை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அ்நநாட்டின் மீதான பொருளாதார தடையை இந்த 6 வல்லரசு நாடுகளும் திரும்ப பெற வேண்டும்.

இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்து கொண்டது. அதிலிருந்து விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து பொருளாதார தடையையும் விதித்தார்.
                                    

இதனால் அணுசக்தி ஒப்பந்தத்தில் 4ஐ ஈரான் நிராகரித்தது. தொடர்ந்து, இருநாடுகளிடையை கடும் மோதல் உண்டானது. அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவரது இறப்புக்கு பழிக்குப்பழி வாங்குவோம் என ஈரான் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் டெஹ்ரானில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வதாக ஈரான் அரசு அறிவித்தது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது : 2015ல் வல்லரசு நாடுகளுடனான ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படிய போவதில்லை. ஈரான் அரசு இதனை முழுமையாக ரத்து செய்துள்ளது. இனிமேல், ஈரானின் அணுசக்தி திட்டம் அதன் சொந்த தொழில்நுட்ப தேவைகளின் அடிப்படையில் முன்னேறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

                                   

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று பேசுகையில், அமெரிக்க படைகளை திருப்பி அனுப்பினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து பொருளாதார தடைகளை நீக்கப்பட்டால் அணுசக்தி ஒப்பந்தம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஈரான் அரசு கூறியது. ஈரானின் இந்த முடிவு, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

கைவிட வேண்டுகோள்
தொடர்ந்து, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளின் பிரதமர்களும் கலந்தாலோசித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கைகளை ஈரான் கைவிட வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பான பதற்றத்தை குறைக்க நாங்கள் இயன்றதை செய்வோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.