டெல்லி: தமிழக கடல் பகுதிகளில் காற்றாலை அமைப்பது குறித்து வருகின்ற 27ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை நடத்துகின்றது. தமிழக கடல் பகுதிகளில் காற்றாலை அமைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக வரும் ஜனவரி 27ம் தேதி மிக முக்கியமான ஒரு ஆலோசனையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய கடலோர ஒழுங்குமுறை அமைப்பு நடத்துகின்றது.
மன்னார்வளைகுடா பகுதிகளில் குறிப்பாக வாலிநோக்கம், தனுஷ்கோடி ஆகிய கடற்பகுதிகளில் லைடர் என்னும் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் கருவிகளை பொருத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு லைடர் கருவிகள் மூலமாக அந்த பகுதியில் வீசக்கூடிய காற்றுகள் மூலமாகவும், அவை எந்த அளவிற்கு வீசுகின்றது என்பதை பதிவு செய்வதற்காகவும் தான் 5.5 கோடி மதிப்பீட்டில் இந்த லைடர் கருவிகள் அமைக்கப்படவிருக்கிறது.
ஏற்கனவே பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள கடற்பகுதிகளில் கான்கீரிட் பாலங்கள் அமைத்து அதன் மீதாக காற்றாலையை அமைத்து, அதன் மூலம் மின்சார உற்பத்தியை செய்ய முடிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அதனை மத்திய அரசு மேற்கொள்ளும் பட்சத்தில் ஏராளமான வருவாய் ஈட்ட முடியும் என்பதையும், இவை எந்தவிதமான சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத மின்சாரம் தயாரிக்கக்கூடிய யுக்தியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் மத்திய அரசிற்கும், இந்தியாவுக்கும் மிகப்பெரிய நன்மை விளைவிக்கக்கூடியது உள்ளிட்ட ஏராளமான ஆய்வுகள் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பிரதமர் நரேந்திர மோடியின் நேரடியான கண்காணிப்பில் உருவாகவல்ல மிக முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.
300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் மட்டும் 5 இடங்களில் இந்த கான்கிரீட் தூண்கள் மீது காற்றாலை அமைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கக்கூடிய விரிவான ஒரு திட்டத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்திடம் இவர்கள் கோரிக்கை வைத்திருந்த போது இது தொடர்பாக கடலோர ஒழுங்குமுறை அமைப்பு இதற்கான அனுமதியை வழங்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.
அந்த அனுமதி வருகின்ற 27ம் தேதி ஆலோசனை கூட்டத்தில் நடைபெறுகின்றது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் மிகமுக்கிய மின்சாரத்துறை சார்ந்த ஒரு புதிய அமைப்பானது உருவாகக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது.