Tuesday, 7 January 2020

5 சதவீத பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு கணிப்பு

புதுடில்லி : வரும் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறும் இந்த நிதியாண்டின்(2019 - 20) பொருளாதார வளர்ச்சி(ஜிடிபி) 5 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.


இது கடந்த நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்தது. பெரும்பான பொருளாதார நிபுணர்களும், 2019 - 20 நிதியாண்டில் ஜிடிபி 5 சதவீதமாக தான் இருக்கும் என கணித்திருந்தனர். கடந்த மாதம் ரிசர்வ் வங்கியும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் தான் எனக்கூறியிருந்தது.
                                


நுகர்வோர் தேவை, தனியார் முதலீடு குறைவு மற்றும் சர்வதேச மந்தநிலை காரணமாக ஏற்றுமதி குறைந்தது. இதனால் பொருளாதாரத்தை பாதித்து, கடந்த காலாண்டில் 5 சதவீதமாக இருந்தது. தேவை குறைவு மற்றும் பல துறைகளில் ஏற்பட்ட வேலையிழப்பு காரணமாக வளர்ச்சி குறைந்ததால், பொருளாதாரம் பாதித்துள்ளது