Tuesday, 7 January 2020

நெல்லைக்கு பகல் நேர ரயில் தினமும் இயக்க கோரிக்கை

சென்னை: 'சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு, தினமும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்' என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.



ரயில்வே அமைச்சகம், ரயில்வே வாரியம் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணியர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:சென்னை எழும்பூரில் இருந்து, காலை, 8:15க்கு, திருச்சி வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. 

அதன்பின், மதியம், 1:40க்கு மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும், மாலை, 3:45க்கு காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகின்றன.காலை, 8.15 க்கு பின், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்வதென்றால், மாலை, 4:00க்கு இயக்கப்படும், திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் செல்ல முடியும். 

துாத்துக்குடிக்கு வேறு எந்த பகல் நேர ரயிலும் இல்லை.சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு, பகல் நேரத்தில் செல்ல வேண்டுமானால், மதியம், 1:40க்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை சென்று, அங்கிருந்து, பஸ்சில் தான் துாத்துக்குடி செல்ல வேண்டியுள்ளது.எனவே, காலை, 10:௦௦ முதல், பகல், 12:௦௦ மணிக்குள், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு, தினசரி ரயில் இயக்க வேண்டும். இந்த ரயில், திருநெல்வேலி செல்லும் நேரத்தில், அங்கிருந்து, துாத்துக்குடிக்கு இணைப்பு பயணியர் ரயில் இயக்கினால் உதவியாக இருக்கும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.