'ஒப்போ, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 புரோ' ஆகியவற்றை அறிமுகம் செய்த கையோடு, 'ஒப்போ என்கோ பிரி' எனும் ஒயர்லெஸ் இயர்போனையும் அறிமுகம் செய்துள்ளது. வியர்வை உள்ளிட்டவற்றால் பாதிக்காத வகையில், இது தயாரிக்கப்பட்டுள்ளது. இரட்டை மைக்ரோபோன் இருப்பதால், அழைப்புகளை தெளிவான ஒலியில் கேட்கலாம்.

காதிலிருந்து கழற்றியதும், தானாகவே செயலை நிறுத்திக் கொள்ளும். அதேபோல், அதன் பெட்டியிலிருந்து எடுத்ததும், தானாகவே போனுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த என்கோ பிரி, ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., என, இரண்டு வகை சாதனங்களிலும் பயன்படுத்த முடியும்.
ஹெட்செட் ஒவ்வொன்றும், 4.6 கிராம் எடை கொண்டதாக உள்ளது. ஐந்து மணி நேரம் தனியாகவும், 25 மணி நேரம் பெட்டியுடனும் தாக்குப் பிடிக்கும் வகையில், 'பேட்டரி' திறன் உள்ளது. இளஞ்சிவப்பு, கறுப்பு, வெள்ளை என, மூன்று வர்ணங்களில் அறிமுகமாகியிருக்கும் இதன் விலை, இந்திய மதிப்பில், 7,100 ரூபாய்.