Thursday, 9 January 2020

பசு நல வாரியத்திற்காக நிதி அதிகரிப்பு உ.பி., முதல்வர்

லக்னோ: மாநிலத்தில் பசு நல வாரியத்திற்காக செஸ் வரியை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என வேளாண்துறையை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.





மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற வேளாண் உற்பத்தி சந்தைகள் வாரிய கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் கூறியதாவது: மாநிலத்தில் செயல்பட்டு வரும் பசு நல வாரியத்திற்காக வேளாண்துறை 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையில் செஸ் வரியை உயர்த்த வேண்டும்.



உயர்த்தப்படும் இந்த தொகையானது மாநிலத்தில் பசு முகாம்களை அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுத்தி வரும் நிறுவனங்களுக்கு இந்த தொகை கிடைக்கும் படி செய்ய வேண்டும் மேலும் இந்த தொகையில் ஒரு பகுதி கால்நடை பாராமரிப்பு துறைக்கும் வழங்க வேண்டும் என கூறினார்.



தொடர்ந்து வளைகுடாவில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமுதல்வர், பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் காய்கறிகளின் விலைகள் குறித்து கண்காணிக்க வேண்டும். செயற்கை பற்றாக்குறையை உருவாக்குவது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். இதனை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.