வாஷிங்டன்: ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. 'இதற்கு பழிக்கு பழி வாங்க நேற்று ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று அதிபர் டிரம்ப், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதித்தார்.

டிரம்ப்பிற்கு கடிவாளம்
இந்த சூழ்நிலையில் ஈரானுக்கு எதிராக போர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்தை குறைக்கும் தீர்மானம் கொண்டு வந்து பார்லி.யில் ஓட்டெடுப்பு நடத்த ஜனநாயக கட்சி எம்.பி.க்கள், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நான்சி பெலோசி கூறியது, ஈரானுக்கு எதிரான அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகள் போர் பதற்றத்தை தீவிரப்படுத்து போன்று உள்ளது. அமெரிக்கர்களை பாதுகாக்கவும் அமெரிக்கர்களின் நலனுக்காக பார்லி.யில் ஒட்டெடுப்பு நடத்தப்படும். என்றார்.
