புதுடில்லி: பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்திட பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.சி.பி.ஏ. எனப்படும் பார்லி. விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை எப்போது நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இரண்டு கட்டங்கள்
இது குறித்து மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரை ஜன.31-ம் தேதி துவக்கி, பிப்.1-ம் தேதியன்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவும், பிப்.11-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்தி முடிக்கவும்,
பின்னர் மீண்டும் மார்ச் 2-ம் தேதி துவக்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை என இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரு கூட்டத்தொடர்களிடையே உள்ள இடைவெளியில், பல்வேறு அமைச்சகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் குறித்து ஆராயவும், அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
