பாக்தாத் : தெஹ்ரானில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய 24 மணி நேரத்தில், ஈரான் தலைநகர் பாக்தாத்தில் க்ரீன் ஜோன் (Green zone)எனப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இரண்டு முறை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாக்தாத்தில் அமெரிக்க ஏவுகணை தளம் உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியன அமைந்துள்ள அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதி க்ரீன் ஜோன் எனப்படுகிறது. இப்பகுதியில் நேற்று நள்ளிரவு, பயங்கர சத்தத்துடன் 2 முறை ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என ஏஎப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை அமெரிக்கா தான் நடத்தி இருக்கும் என ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அழிக்கும் நோக்குடன் ஈரான் படைகள் தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காகவே, அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே அமெரிக்கா இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாக ஈரான் கூறுகிறது.
