வாஷிங்டன்,:அமெரிக்க அதிபர் பதவிக்கு, இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் தீவிரமாக உள்ளார்.
ஜோ பிடனின் மகன், ஐரோப்பிய நாடான உக்ரைனில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். ஜோ பிடன் மீது பொய் வழக்குகளை தொடரும்படி, உக்ரைன் அதிபருடன், டிரம்ப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, டிரம்ப் மீது, பார்லி.,யில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில், இந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. அடுத்ததாக, சென்ட் சபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இங்கு, குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.கண்டன தீர்மானம் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான விதிகளை உருவாக்குவதில், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் உள்ளது.
'சாட்சிகளை விசாரிக்க வேண்டும்' என, ஜனநாயக கட்சி கூறுகிறது. ஆனால், அதை குடியரசு கட்சி எதிர்த்து வருகிறது.இந்தக் குழப்பங்களுக்கு இடையே, பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய மசோதாவை, செனட்டில் விவாதிப்பதற்காக அனுப்பாமல், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில், குடியரசு கட்சியைச் சேர்ந்த மிட்ச் மெக்கோனல், புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். 'ஜனநாயக கட்சியின் கோரிக்கையை ஏற்காமல், கண்டன தீர்மானம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, அவர் வலியுறுத்தியுள்ளார்; இதற்கான ஆதரவை திரட்டி வருகிறார்.அதனால், எப்போது கண்டன தீர்மானம், செனட் சபையில் விவாதத்துக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.