புதுடில்லி: டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறை சம்பவம், அதை தொடர்ந்து நடைபெறும் மாணவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், செயற்குழு கூட்டம், நாளை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக, காங்., தொண்டர்கள், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்துக்கும், காங்., ஆதரவளித்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், கடந்த ஞாயிறன்று, முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, ஜே.என்.யு., மாணவர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலை மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜே.என்.யு., வன்முறை சம்பவம், அதை தொடர்ந்து நடைபெறும் மாணவர் போராட்டம் குறித்து, காங்.,கின் அடுத்த கட்ட நடவடிக்கை களை விவாதிக்க, கட்சியின் தலைவர் சோனியா தலைமையில், செயற்குழு கூட்டம், நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆனால், 'இது பற்றி, காங்., செயற்குழு உறுப்பினர்களுக்கு, முறையான அழைப்பு எதுவும் அனுப்பப்படவில்லை' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.