Wednesday, 8 January 2020

உலகின் மிக உயரமான ரயில் பாலம் டிச.2021ல் முடிக்க இலக்கு

புதுடில்லி : காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.1110 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த பாலம் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விடவும் உயரமானது ( ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர்களாகும்.) 1.3 கி.மீ., நீளம் கொண்ட இந்த பாலத்தின்உயரம் 359 மீட்டர் ஆகும்.





இது குறித்து கொங்கன் ரயில்வே நிர்வாகம் கூறியது, சீனாவில் 275 மீ. உயரம் கொண்ட ஷிபாய் ரயில்வே பாலமே உலகின் மிக உயரமான ரயில்வே பாலமாககருதப்படுகிறது.

தற்போது காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலப்பணிகள் 2021-ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்திய ரயில்வே வரலாற்றில் இந்த பாலம் மிகப்பெரிய சாதனையாக திகழும் என்றார்.