Wednesday, 8 January 2020

பெல் உள்ளிட்ட 5 நிறுவன பங்குகளை விற்க ஒப்புதல்


புதுடில்லி: பெல் நிறுவனம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பெல், நீலச்சல் இஸ்பட் நிகாம் லிமிடெட், தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம், மெகான் மற்றும் நேஷனர் மினரல் டெவலப்மென்ட் பங்குகளை விற்க, கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ஜவடேகர், அமைச்சரவை கூட்டத்திற்குபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், ஏர் இந்தியாவின் பங்குகள் முழுவதையும் தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது குறப்பிடத்தக்கது.
அதிர்ச்சி

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய ஸ்டிரைக் நடந்த நிலையில், மத்திய அமைச்சரவை பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல் அளித்தது, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.