சென்னை: ''யோகாசனம் செய்தால், கோபம் மறையும். சென்னை பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு, யோகா கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:காங்., - கணேஷ்: ஊட்டியில், யோகா மையம் அமைக்க, அரசு ஆவன செய்யுமா?அமைச்சர் செங்கோட்டையன்: திட்டம் எதுவும் இல்லை.கணேஷ்: எங்கள் மாவட்டத்திற்கு, அரசு மருத்துவக் கல்லுாரி வழங்கிய, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி. அங்கு, பல்நோக்கு மருத்துவமனை அமைய உள்ளது.
அதேபோல், யோகா மையம் அமைத்தால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலாப் பயணியருக்கும் பயனளிக்கும். அதேபோல், மலையாளம் பேசும் மக்களுக்கு, ஜாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: மாவட்ட விளையாட்டு மைதானத்தில், யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு அதிக நபர்கள் வருவதாக இருந்தால், கூடுதல் பயிற்சியாளர்களை வைத்து, யோகா பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - மா.சுப்பிரமணியன்: தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியர், மாநகராட்சி ஊழியர்கள், டிரைவர்கள் என, அனைவருக்கும் யோகா கற்றுத் தரப்பட்டது;
தற்போது, கற்றுத் தரப்படவில்லை. பள்ளி குழந்தைகளுக்காவது கற்றுத்தர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: உடல் ஆரோக்கியத்திற்கு, யோகா நல்லது. முகம் பொலிவுடன் இருக்க, யோகா உதவுகிறது; கோபம் கட்டுப்படுகிறது. எனவே, உள்ளாட்சி துறை அமைச்சருடன் கலந்து பேசி, பள்ளிகளில் குழந்தைகளுக்கு, யோகா கற்றுத் தர, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.