புதுடில்லி: ''சில மோசடி நிறுவனங்கள் மீது மத்திய அரசு எடுக்கும் கடும் நடவடிக்கையை தொழில் துறையினருக்கு எதிரானதாக பார்க்க கூடாது '' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் 1ல் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாட்டின் முன்னணி கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாடா, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், தொழிலதிபர்கள் கவுதம் அதானி, ஆனந்த் மகேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன், டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

