சென்னை: வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கிடைக்காததால், வணிக வாகனங்களுக்கு, தகுதிச்சான்று பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
சாலை விபத்துகள் மற்றும் வாகன திருட்டுகளை கண்காணிக்கும் வகையில், வணிக வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகளை பொருத்த, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.'வாகன்'இதையடுத்து, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், வாகனங்களின் பரிவர்த்தனைகள் அனைத்தும், 'வாகன்' என்ற, மென்பொருள் வழியாக செயல்படுத்தப்படுகின்றன.
இந்த மென்பொருளின் வழியாக வாகனங்களின், ஜி.பி.எஸ்., மற்றும், வேகக் கட்டுப்பாட்டு கருவியை கண்காணிக்க முடியும்.அதாவது, அதிவேகமாக இயக்கப்படும் வாகனம், வாகனம் செல்லும் திசை உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இந்த பயன்பாட்டுக்காக, இரண்டாண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், வாகன் மென்பொருளுடன் இணையவில்லை என, கூறப்படுகிறது.
இதனால், குறிப்பிட்ட நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்தினால் மட்டுமே, எப்.சி., என்ற, தகுதிச்சான்று வழங்கப்படும் என, பல வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர்.இடைத்தரகர்கள்வேகக்கட்டுப்பாட்டு கருவிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் புகுந்து, 2,500 ரூபாய் மதிப்புள்ள கருவிகளை, 10 ஆயிரம் ரூபாய் வரை, செயற்கையாக விலையேற்றி உள்ளனர்.
இது குறித்து, தமிழக சுதந்திர வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் சங்க செயலர் ஜூட் மேத்யூ கூறியதாவது:தமிழகத்தில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளுக்கான, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்து, போக்குவரத்துத் துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை; ஆனால், ஆர்.டி.ஓ.,க்கள் நிபந்தனை விதிப்பதால், இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி, தமிழக போக்குவரத்து கமிஷனர் விசாரிக்க வேண்டும். புதிய கருவிகள் பொருத்த அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.