மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
Thursday, 9 January 2020
தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம்
சென்னை: தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
3வது சென்னை புத்தகக்காட்சி தொடக்கம் புத்தகக் காட்சி நடத்த அரசு 75 லட்சம் வழங்கும் : முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
சென்னை: அடுத்த ஆண்டில் இருந்து புத்தகக் காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று 43வது சென்னை புத்தகக்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி கூறினார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தனி அதிகாரி பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
பெட்ரோல் 15 காசு, டீசல் 12 காசு விலை அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,10) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.92 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.97 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் விமான விபத்து: ஈரான் மீது அமெரிக்கா சந்தேகம்
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியாகி இருக்கலாம் என அமெரிக்கா, கனடா சந்தேகம் எழுப்புகிறது.
பசு நல வாரியத்திற்காக நிதி அதிகரிப்பு உ.பி., முதல்வர்
லக்னோ: மாநிலத்தில் பசு நல வாரியத்திற்காக செஸ் வரியை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என வேளாண்துறையை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.
நிதியமைச்சர் எங்கே? : காங்., கேள்வி
புதுடில்லி ; பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது குறித்து காங்., சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறது.
புகையில்லா பொங்கல் : பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை : பொங்கல் திருநாளை புகையில்லா பொங்கலை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிகல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
காருக்கு ரூ.27.68 லட்சம் அபராதம்: இந்தியாவிலேயே அதிகபட்ச தொகை
ஆமதாபாத்: உரிய ஆவணம் இல்லாததால் காவல்துறையினர் பறிமுதல் செய்த காருக்கு ரூ.27.68 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச அபராதம் இது தான்.
குமரி அனந்தன் கோரிக்கை
சென்னை: 'உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் எல்லைக்குள் மதுவுக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
பொங்கல் பரிசு வழங்க ரூ 2360 கோடி ஒதுக்கீடு
சென்னை: பல்வேறு திட்டப் பணிகளுக்கு 6580.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நேற்று இரண்டாவது துணை மதிப்பீடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
Subscribe to:
Comments (Atom)
